8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு நியமனம்

12.11.2021 10:05:40

முத்துராஜவல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அமரவீர, சீ.பி ரத்னாயக்க, நாலக கொடஹேவா, நிமல் லன்சா, சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, நளின் பெர்ணான்டோ, ஜயந்த வீரசிங்க மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயவத்தும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக தெரவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.