தகவல்களில் உண்மையில்லை; அஜித் நிவாட் கப்ரால் மறுப்பு

13.12.2021 16:23:40

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் இந்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டதாக வெளியான தகவல்களை அவர் மீண்டும் மறுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவது தொடர் பில் கலந்துரையாட அமைச்சரவை தன்னை அழைத்த தாக எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரை மேற்கோள் காட்டி ஊடகங்களில் வெளியான செய்திகள் போலியா னவை என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதோடு இது நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும் எதிர்க் கட்சிகளின் தவறான பிரசாரத்தின் ஒரு பகுதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.