போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லை என அறிவிப்பு

09.05.2022 08:00:00

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கு போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் விடுமுறை நாளாக இருந்தாலும், முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையம் மட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை வழங்கியுள்ளது.

லிட்ரோ நிறுவனத்திடம் நாம் வினவியபோது, ​​உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிடுவதற்கு தங்களிடம் கையிருப்பு இல்லை என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், பல பகுதிகளில் உள்ள மக்கள் எரிவாயு வழங்கக் கோரி முக்கிய சாலைகளை மறித்து இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.