அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
24.02.2022 10:27:29
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் வைத்தியர்களின் இடமாற்றங்கள், மருந்து தட்டுப்பாடு மற்றும் சம்பளம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.