அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் எச்சரிக்கை!
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிளைச் சந்தித்துவரும் நிலையில் தற்போது மருந்துத் தட்டுப்பாடும் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக பல அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்யமுடியாத நிலை காரணமாகவே இந்த நெருக்கடி ஏற்படக்கூடும் என அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
அடுத்த 3, 4 மாதங்களில் அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் சத்திரசிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்உள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் விடுத்துள்ளார்.