15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் தலைமறைவு
23.11.2021 06:39:38
அம்பாறை திருக்கோலில் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 7 மாத கர்ப்பிணியாக்கிய சகோதரியின் கணவர் தலைமறைவாகியுள்ளதுடன் சிறுமியின் தாயார் மற்றும் சிறுமியின் சகோதரி உட்பட இருவரை நேற்று (22) கைது செய்துள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரும் குற்றத்தடுப்பு காவல்துறை பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்தார்.