முள்ளிவாய்க்கால் பகுதியில் விபத்து ஒருவர் பலி

21.03.2022 09:09:02

யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வழித் தடத்தில் பயணிக்கும்  பேருந்து ஒன்று  நேற்றையதினம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் விபத்தில் சிக்கியதில்  ஒருவர் பலியானதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதுடன் 6 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பஸ், வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் சுமார் 40 க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.