எம் .ஏ .சுமந்திரனுக்கு திடீரென வந்த அழைப்பு

26.03.2022 13:14:10

ஜனாதிபதியுடனான சந்திப்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் வடக்கிலுள்ள காணிகளை பாதுகாப்பு பிரிவினர் கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டை முன்வைததைத்  தொடர்ந்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்   சுமந்திரனுக்கு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி   பதில் அளித்த இராணுவ தளபதி அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை எனவும் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வடக்கில் காணி பிரச்சினைகள் இருக்குமானால், அது குறித்து இராணுவ தளபதியுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி தமக்கு கூறியதாக சுமந்திரன், ஷவேந்திர சில்வாவிடம்  தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.