“தேவையற்று ஔிரும் மின்குமிழ்களை அணையுங்கள்”
07.12.2021 15:51:52
வீட்டில் தேவையற்ற இடத்தில் ஔிரும் மின்குமிழை அணைத்து, மின்சாரத்தை சேமிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன (Sulaksana Jeyawardana) இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
"கடந்த சில தினங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ச்சியாக மின் விநியோகத்தை மேற்கொள்வது எமது பொறுப்பாகும்