பேராயரை வத்திக்கான் அழைத்துச் செல்ல சிறப்பு பிரதிநிதி வருகை!

20.02.2022 10:12:22

வத்திக்கானுக்கு விஜயம் செய்ய தயாராகி வரும் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை அழைத்துச் செல்வதற்காக வத்திக்கானில் இருந்து விசேட தூதுவர் இலங்கை வந்துள்ளார்.

கர்தினாலை வத்திக்கானுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்த பிரதிநிதி அருட்தந்தை நெவில் ஜோ என்பது தெரிய வந்துள்ளது. வத்திக்கானுக்கு விஜயம் செய்ய தயாராகி வரும் பேராயர், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து பாப்பரசரிடம் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.