பிரபல புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம அவரது 80 ஆவது வயதில் காலமானார்
08.06.2022 09:44:29
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த பிரபல புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம அவரது 80 ஆவது வயதில் காலமானார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் துப்பாக்கியால் தாக்குவதை சேன விதானகம படம்பிடித்திருந்தமை உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.