இரு ஊழியர்கள் காட்டுயானை தாக்கி உயிரிழப்பு!

08.12.2021 04:29:20

ஹம்பாந்தோட்டை – சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் அரங்கின் ஊழியர்கள் இருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்களது சடலங்கள் விளையாட்டரங்கின் பின்புறமாக உள்ள வீதியிலிருந்து இன்று (8) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரும் நேற்று (7) இரவு குறித்த விளையாட்டரங்கில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.