தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு இருபத்தியைந்து வருடங்கள் நிறைவு

12.03.2022 15:59:55

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு இருபத்தியைந்து வருடங்கள் நிறைவுற்றதனை முன்னிட்டு தொகுக்கப்பட்ட நினைவு மலர் உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு பல்கலைக்கழக உபவேந்தர் அலுவலகத்தில் உபவேந்தர் பேராசிரியர் அபூவக்கர் றமீஸ் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் நினைவு மலரின் பிரதம ஆசிரியரும் நூலகருமான எம்.எம். ரிபாஉத்தீன், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம். மஸாஹிர், பதிவாளர் எச். அப்துல் சத்தார் உள்ளடங்கலான நினைவு மலர் பதிப்புக் குழுவினர் கலந்துகொண்டனர்.