பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி
06.03.2024 07:43:23
“பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி” என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்துள்ளார்.
பசில் ராஜபக்சவின் வருகை இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனினும் பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்துஅமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணியாக உள்ளார்.
இலங்கையில் பணம் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளையே நாங்கள் விரும்புகிறோம். இலங்கையின் ஹம்பகராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அமெரிக்காவில் பணம் செலவழிக்க விரும்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.