குடும்பத் தகராறை சமரசம் செய்ய சென்ற நபர் படுகொலை!

02.07.2022 16:48:59

நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயல் வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க சென்ற போதே குறித்த இளைஞன் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நபர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயங்களுடன் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையிலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.