குழந்தையை விற்று, போதைப்பொருள் பயன்படுத்திய பெற்றோர்
குருநாகல் பகுதியில் தனது குழந்தையை விற்பனை செய்து, அந்த பணத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த குழந்தையை 7 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குருநாகல் நகரிலுள்ள சட்டத்தரணி ஒருவரின் ஊடாக, கடிதமொன்றை கையெழுத்திட்டு, அநுராதபுரம் பகுதியிலுள்ள தம்பதிகளுக்கு குழந்தையை கையளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரின் கை பையிலிருந்து குழந்தையொருவரின் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆடைகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே, இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையை விற்பனை செய்த பணத்தில் 30,000 ரூபாவிற்கு போதைப்பொருளை கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எஞ்சிய 6,70,000 ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.