உலகளாவிய ரீதியில் 7,516 பேர் கொவிட் தொற்றினால் பலி!

11.11.2021 05:08:10

கடந்த 24 மணிநேரத்தில் உலகளாவிய ரீதியில், 7,516 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், ரஷ்யாவிலேயே அதிகளவான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அங்கு மாத்திரம் கடந்த 24 மணி நேரத்தில், 1,239 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 38,058 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,229 பேரும், உக்ரைனில் 815 பேரும் துருக்கியில் 203 பேரும், ஜேர்மனியில் 244 பேரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.