ஆசியாவின் ராணியை குறைந்த விலையில் வழங்க மறுக்கும் இலங்கை

05.01.2022 08:53:05

இலங்கையில் கண்டுபிடிக்கப்ட்ட ஆசியாவின் ராணி என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கல்லை 2000 கோடி ரூபாவுக்கு வாங்குவதற்கு டுபாய் நிறுவனமொன்று விருப்பம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் வினவிய போது, ​​இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அந்த விலையில் இரத்தினக்கற்களை வழங்க இலங்கை தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.

 

அதனை விடவும் அதிக விலை எதிர்பார்ப்பில் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.