கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக நிதி செலவு !

18.03.2022 06:03:13

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக அந்த நிதியத்தின் பணத்தை பயன்படுத்தியதன் காரணமாக கலாசார நிதியத்தின் அடிப்படைப் பணிகளுக்கு நிதி இல்லை என தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.