ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த சகலருடனும் இணைந்து பரந்த எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க கூட்டணிக்கு தலைமை தாங்கினாலும், பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு வரமாட்டார் என்றும் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.