வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!
02.07.2022 16:51:22
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவு அதன் வழமையான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விசேட அறிக்கையினூடாகத் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைகள் வாராந்தம் 3 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தூதரக சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்திற்கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.