யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்
23.11.2021 06:35:56
யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேருந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுண்ணாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தாவடி சந்தியில் இன்று காலை இந்த விபந்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிலில் சென்ற கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி உட்பட ஆண் ஒருபரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.