முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுகாயம்
13.12.2021 07:13:58
பம்பரகல தோட்டத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நோட்டன்பிரிட்ஜ் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி பிரதான வீதியில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் கவிழ்ந்து அருகில் உள்ள வீட்டின் முற்றத்தில் நின்றுள்ளது.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் விபத்து இடம்பெற்ற போது முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட நால்வர் பயணித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
நோட்டன்பிரிட்ஜ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.