அடுத்தகட்ட மின்வெட்டு பற்றிய அறிவிப்பு

04.03.2022 12:27:51

வார இறுதி தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, நாளைய தினம்  P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை  மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 A,B,C பிரிவுகளுக்கு காலை 8.30 முதல் 4.30 வரை 04 மணி நேரமும், மாலை 4.30 முதல் இரவு 10.30 வரை  மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் , A,B,C பிரிவுகளுக்கு மார்ச் 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை  மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.