நாடாளுமன்ற அமர்வை நிறைவுறுத்தி விசேட வர்த்தமானி
13.12.2021 07:19:02
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நாடாளுமன்ற அமர்வை நிறைவுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீள ஆரம்பமாகவுள்ளது.