பேருந்து மோதி வயோதிபர் மரணம்

20.11.2021 10:38:12

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து வயோதிபர் ஒருவர் மீது மோதியதில் அவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மாத்தளை ஹபரண வீதி, அவுடங்காவ பிரதேசத்தில் தம்புள்ளையிலிருந்து ஹபரண நோக்கிப் பயணித்த பேருந்தே , பாதசாரி மீது மோதியுள்ளது

இந்த விபத்தில் சிக்கி அடுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது நபரே மரணமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.