அரசுக்கு எதிராக யாழில் துவிச்சக்கரவண்டிப் பேரணி

09.07.2022 09:18:09

 

புன்னாலைக்கட்டுவனிலிருந்து 

அரச தலைவர், பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக்கோரி யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ்.நகர் நோக்கி துவிச்சக்கர வண்டிப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனிலிருந்து இன்று காலை குறித்த பேரணி ஆரம்பமாகியுள்ளது.

"மக்களை வட்டி வதைத்து வரும் கோட்டா அரசே வீட்டுக்கு போ"  எனும் தொனிப்பொருளில் புதிய மாக்சிச லெனினிசக் கட்சி புன்னாலைக்கட்டுவனிலிருந்து குறித்த துவிச்சக்கர வண்டிப் பேரணியை ஆரம்பித்துள்ளது. 

பல்வேறு தரப்பினரும் ஆதரவு

குறித்த போராட்டத்திற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், செம்முகம் ஆற்றுகைக்குழு, தேசிய கலை இலக்கிய பேரவை, தமிழ்த்தேசிய பண்பாட்டு பேரவை, யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம்,குரலற்றவர்களின் குரல், பன்மைத்துவ மக்களாட்சி மன்றம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகிய பொது அமைப்புகள் ஆதரவளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்