பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் கொண்டு வரும் பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திஆதரிக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று தெரிவித்தார்

இது தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்று பெரேரா கூறினார்.

"அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தென்னகோனின் பெயரை பரிந்துரைத்தபோது எங்கள் தலைவர் சஜித் பிரேமதாசவும், பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமும் தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்தனர். தவறான நடத்தை காரணமாக அவர்கள் அவரை எதிர்த்தனர். அவர் மீதான எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றவில்லை," என்று அவர் தெரிவித்தார்.