கிண்ணியா படகு விபத்தின் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!
16.12.2021 08:06:11
கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதக்கும் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் ஐந்து இலட்சம் ரூபாய் சரீரம் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (16) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டு, குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.