ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை துரிதப்படுத்துமாறு ரணில் அறிவிப்பு
16.07.2022 11:41:05
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை துரிதப்படுத்துமாறு சிறிலங்கா பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளார்.
நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த செயல்முறை அவசரமாக எடுக்கப்படவுள்ளதால், ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் அடுத்த அல்லது இரண்டு வாரங்களுக்குள் முடிக்கப்படும் என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.