சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் மூடல்.
சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக நாளை (07) முதல் 12ஆம் திகதி வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ளது.
இதனால், நாளை காலை 9 மணி வரை மாத்திரம் பேருந்து சேவைகள் வழமைபோன்று பாலத்தின் ஊடாக இடம்பெறும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து பூநகரி நோக்கி வரும் பேருந்துகள், பூநகரியிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்தி சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.
மாற்று வழித்தடம் காரணமாக பேருந்துகளின் பயணத் தூரம் சுமார் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், இதனால் சிறிய அளவிலான பேருந்துக் கட்டண உயர்வு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்று வழித்தடத்தை கருத்திற்கொள்ளுமாறு அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.