காவல்துறை துறையை புனரமைக்க வேண்டிய காலம்

27.12.2021 17:43:34

காவல்துறை துறையை புனரமைக்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாக மூன்றாம் கண் அமைப்பின் குடியியல் செயற்பாட்டாளர் சஞ்ஜீவ பிரதீப் (Sanjeeva Pradeep) தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எதிராக செயற்படும் நிலை மாறி இன்று அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் செயற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மூன்றாம் கண் என்ற குடியியல் அமைப்பு கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 காவல்துறை துறையை புனரமைப்பது தொடர்பாக ஏற்கனவே கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.