கொவிட் பரிசோதனைகளுக்கான நிர்ணய விலை அதிகரிக்கப்படாது
கொரோனா பரிசோதனைகளுக்கான நிர்ணய விலையினை அதிகரிப்பதற்கான தேவைப்பாடுகள் இல்லையென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (5) இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளுக்கு அமைய குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உலக சந்தையில் அதன் விலைகளில் மாற்றம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் நிலவுகின்றன.
இதேவேளை, அத்தியாவசிய சேவை ஆணையாளரின் கடமைகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
சீனி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றை வர்த்தகர்கள் பதுக்கி வைத்திருந்தனர்.
அதனை சந்தைக்கு உரிய வகையில் விநியோகிப்பதற்கான குறித்த ஆணையாளர் நியமிக்கப்பட்டிருந்தாரென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.