மட்டக்களப்பு திராய்மடுவில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

05.12.2021 05:20:12

மட்டக்களப்பில் திராய்மடு புகையிரத தண்டவாளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக காவற்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான கந்தையா அசோக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து  கொழும்பு நோக்கி அதிகாலை 5.45 மணிக்கு சென்ற ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்துள்ளதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.