சடுதியாக வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா

09.09.2022 15:14:10

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.38 ரூபாவாகவும், கொள்வனவு விலை 358.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள அதே நேரம் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 370.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 355.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டேர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 426.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 410.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.