வாடகை வீடுகளில் வசிப்போருக்காக வீடமைப்பு திட்டம்

22.03.2022 14:22:00

குறைந்த வருமானம் கொண்ட வாடகை வீடுகளில் வசிப்போருக்காக வீடமைப்பு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கென அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

காணிகள் மற்றும் வீடு இன்றி குறைந்த வசதியுடன் வாழும் வாடகை வீட்டிலுள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாண கட்டிட மூலப்பொருட்கள் தொழிற்துறை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

4 அடுக்குகளை கொண்டதான தொடர்மாடி வீடமைப்பு திட்டத்தின் ஊடாக முதற்கட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, மாகாண மட்டத்தில் 464 வீடுகளை கொண்ட 9 தொடர்மாடி குடியிருப்புக்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.