மின்வெட்டு - நுகர்வோர் அடையும் இன்னல்கள்

25.02.2022 11:23:20


நாடளாவிய ரீதியில் இடம்பெறும் அண்மைய மின்வெட்டுகளின் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.

இதனால் இவ்வார இறுதியில், இரவு வேளைகளில் மின்வெட்டை தவிர்க்குமாறு அல்லது குறைந்தபட்ச மின்வெட்டையேனும் விதிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இதனை தெரிவித்துள்ளார்.