முன்னாள் ஆசிரியர் பாடசாலைக்குள் சென்று ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்

17.11.2021 07:20:22

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு வகுப்பாசிரியருக்கு பாடசாலைக்குள் சென்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர்களை புகைப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக வவுனியா காவல் நிலையத்தில் பாடசாலையின் அதிபரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இது குறித்து மேலும் தெரியவருகையில் ,

கடந்த சனிக்கிழமை பாடசாலையில் வகுப்புக்கள் இடம்பெற்றபோது முன்னாள் ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்குள் சென்று வகுப்பு ஆசிரியர்களுடன் முரண்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர்களை அவரது கைத்தொலைபேசியில் புகைப்படம் பிடித்துள்ள சம்பவம் குறித்து பாடசாலையின் அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது . இதையடுத்து வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஆசிரியருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இதேவேளை குறித்த ஆசிரியர்கள் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றியபோது ஓய்வு பெற்றுச் சென்ற பாடசாலையின் அதிபருடன் பல்வேறு முரண்பாடுகளையும் பாடசாலை சமூகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நடவடிக்கையில் செயற்பட்டிருந்தார்.இதையடுத்து அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.