இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 35 000 கண்கள் யாருடையவை?
07.12.2021 07:44:41
கண் தானமாக இலங்கையிடமிருந்து 35,000 விழிவெண்படலங்களை பாகிஸ்தான், பெற்றதாக அந்நாட்டின் மருத்துவர் ஒருவர் கூறியிருந்தார்.
சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவதனவை ஒரு குழுஅடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவிக்கையில் குறித்த கண் மருத்துவர் இத்தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 35 000 கண்கள் யாருடையவை என மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் பதிவொன்றினை தனது முகநூலில் இட்டுள்ளார். இந்நிலையில் அவரது இப்பதிவானது பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.