விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: மூன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் !
ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
உலகில் மிகவும் பழமையான இந்த தொடர், புற்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க தொடராகும்.
ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதன்படி தற்போது நடைபெற்றுவரும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, மூன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,
1. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், கனடாவின் டேனிஸ் ஷபலோவ், பிரித்தானியாவின் என்டி முர்ரேவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டேனிஸ் ஷபலோவ், 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
2. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 6-4, 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
3. இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் கர்பீன் முகுருசா, துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூருடன் மோதினார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், ஒன்ஸ் ஜாபூர் 5-7, 6-3, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.
4. இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், பெல்ஜியத்தின் எலீஸ் மெர்டன்ஸ், அமெரிக்காவின் மெடிஸன் கீஸை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், அமெரிக்காவின் மெடிஸன் கீஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.