அதிமேதகு என்ற சொற்பதத்துக்கு தடை விதிக்கின்றேன்

15.07.2022 11:03:54

அதிமேதகு என்ற சொற்பதத்துக்கு தடை விதிக்கின்றேன் என பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதில் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட அறிவிப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " நாட்டுக்கு தேசியக்கொடி மட்டும் போதும். அதிபர் கொடி இரத்து செய்யப்படுகின்றது.

அரசியலமைப்புக்கு அப்பால் சென்று செயற்பட நான் தயாரில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாதொழிக்க எந்த குழுவுக்கும் இடமளிக்கமாட்டேன்.

 

போராடும் உரிமை உள்ளது ஆனால் வன்முறையை அனுமதிக்க முடியாது. போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரர்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுபவர்கள்.

அடுத்த வாரம் தெரிவாகும் புதிய அதிபருக்கு '19' ஐ விரைவில் முன்வைக்க கூடியதாக இருக்கும்.

நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்" எனக் குறிப்பிட்டார்.