குறைந்த விலையில் எரிவாயு இறக்குமதி

04.05.2022 09:10:55

குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2 இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஓமான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இடம்பெற்ற விலைமனு கோரலின் அடிப்படையில், புதிய நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.