அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை!

18.12.2021 08:26:04

நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

குறிப்பாக விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.