மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலனை

27.04.2022 05:03:50

இலங்கை மின்சார சபை 100 வீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

எவ்வாறாயினும், அந்த அதிகரிப்பு உடனடியாக இடம்பெறாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உரிய பரிசீலனையின் பின்னர் அது தொடர்பாக ஆராய்வதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.