திறக்கப்படாத எஞ்சிய வகுப்புகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

15.11.2021 08:11:16

கொவிட் 19 காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட மற்றும் இன்னும் திறக்கப்படாத அனைத்து பாடசாலைகளினதும் ஏனைய தரங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எஞ்சிய தரங்களுக்கான கல்வி செயற்பாடுகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.