புகையிரதத்துடன் மோதிய டிப்பர் – புகையிரத சேவைகள் பாதிப்பு
06.02.2022 06:36:49
வெலிக்கந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் டிப்பர் ரக வாகனமொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக மட்டக்களப்பு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.