பாசிசவாதியாக ரணில்!

14.07.2022 09:55:26

கொழும்பில் நிராயுத போராட்டகாரர்களை அடக்க, ஆயுதங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு படையினரை அழைத்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சிறந்த மறுசீரமைப்புக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி குரல் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பதில் அதிபர் எனக் கூறிக்கொண்டு நாட்டில் அவசர காலச்சட்டத்தையும் ஊரடங்குச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தி மக்களை அடக்க முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.