கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

05.01.2022 08:54:10

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, ஒமிக்ரோன் பரவலின் அச்சுறுத்தல் மற்றும் விடுமுறை காலங்களில் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென குறிப்பிட்டார்.

 

நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்து ஒமிக்ரோன் நோயாளர்கள் கண்டறியப்பட்டு முழு தீவுக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஒமிக்ரோன் சமூகத்தில் பரவத் தொடங்கியுள்ளது , பொது மக்கள் ஒமிக்ரோன் பரவலை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லையென்பது அண்மைக்கால விடுமுறை நாட்களில் மக்கள் செயற்பட்டதில் தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டார்.