தாதிகளை ஜிம்மிற்கு அனுப்ப ஆதரவளிக்கும் நாமல்

19.01.2023 08:34:15

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் லால்காந்த, தாதிகள் ஜிம்மிற்கு செல்ல வேண்டும், அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என தாதிகள் பற்றி குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் கூறுகையில்,

 தவறாக எதுவும் கூறவில்லை

லால்காந்த தவறாக எதுவும் கூறவில்லை, அவரது எண்ணம் நல்லதே, தூய எண்ணத்துடன் தான் அதனை அவர் கூறியுள்ளதாக நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் கணக்கின் ஊடாக மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்த போது ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.