எரிவாயு பாரவூர்தியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

24.05.2022 09:20:44

மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயுக்காக காத்திருந்த பாவனையாளர்கள் 250 பேருக்கு மட்டும் எரிவாயு வழங்கிவிட்டு செல்ல முற்பட்ட பாரவூர்தியை மறித்து தமக்கு எப்போது எரிவாயு தரப்படும் என உறுதிப்படுத்துமாறு கோரி திங்கட்கிழமை(23) மாலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை எரிவாயுவை பெறுவதற்காக சுமார் 800 பேர் வரையிலான மக்கள் பயினியர் வீதியில் வரிசையில் காத்திருந்தனர் இதில் அன்றைய தினம் எரிவாயு முகவர்களால் 400 பேருக்கு எரிவாயுக்களை வழங்கப்பட்டது இந்த நிலையில் வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள் எரிவாயுவை பெறாது தொடர்ந்து மாலை வரை காத்திருந்து வீடுகளுக்கு சென்றனர்.

இந்த நிலையில சனிக்கிழமை எரிவாயு வழங்கப்படும் என அன்று அதிகாலை 3 மணி தொடக்கம் வீதியில் வெற்றுச் சிலிண்டர்களுடன் மக்கள் காத்திருந்தனர் ஆனால் அன்றும் வழங்கப்படாதைதயடுத்து தொடர்ந்து இரவு பகலாக திங்கட்கிழமை வரை மக்கள் வரிசையில் காத்திருந்தனர் இவ்வாறான நிலையில் திங்கட்கிழமை மாலை முகவர்களால் லொறியில் கொண்டுவரப்பட்ட 250 எரிவாயுக்களை வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வழங்கிமுடித்தனர்.

வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள் எரிவாயுவை பெறாத நிலையில் எரிவாயு தந்தால் தான் பாரவூர்தியை இங்கிருந்து செல்ல அனுமதிக்க முடியம் என வரிசையில் காத்திருந்த மக்கள் பாரவூர்தியை வெளியேறிச் செல்லவிடாது மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினரிடம் ஆர்பாட்டகாரர்கள் எரிவாயு தரப்படும் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு இலக்கம் வழங்குமாறும் கோரி பாரவூர்தியை செல்லவிடாது சுற்றிவளைத்து இருந்தனர் இதனை தொடர்ந்து காவல்துறையினர் எரிவாயு முகவருடன் பேசி புதன்கிழமை எரிவாயு தருவதாகவும் அதற்காக வரிசையில் நிற்பவர்களுக்கு இலக்கங்கள் முகவர்களால் தரப்படும் என தலையீடு செய்து உறதி மொழியையடுத்து பாரவூர்தி அங்கிருந்து செல்ல ஆர்பாட்டகாரர்கள் அனுமதியளித்தனர்.

இருந்தபோதும் தொடர்ந்து அங்கு எரிவாயு சிலிண்டர்களுடன் தொடர்ந்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது